Total Pageviews

165,675

Total Pageviews

165,675

Thursday, May 27, 2010

தமிழ் சமயல் குறிப்புகள்|tamil samayal

*பால் கொழுக்கட்டை*

*பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, உலர்த்தி அரைத்த மாவு),
பொடித்த வெல்லம் - தலா ஒரு கப்,
பால் - 3 கப்,
ஏலக்காய்த்தூள் -
சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை

அரிசி மாவில் உப்பு சேர்த்துக் கிளறி, அதன்மீது கொதிக்கும்
நீர்விட்டு, கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக
உருட்டவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி,
அதில் பாலை ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து பால் கொதித்து வரும்போது அதில்
உருட்டிய உருண்டைகளைப் போட்டு மீண்டும் கொதிக்க விடவும் (இதனை அகலமான
பாத்திரத்தில்தான் செய்ய வேண்டும்). கொழுக்கட்டை வெந்து மேலே மிதந்து வரும்போது
ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.


பேரிச்சம் பழம் பாயசம்




பேரீட்சை பழம் - 100 கிராம்
பாதாம் - 4
ஏலக்காய் - 3
கோதுமை மாவு - 100 கிராம்
பால் - ஒரு லிட்டர்
நெய் - 3 மேசைக்கரண்டி
முந்திரி - 5
திராட்சை - 8

பாதாம் பருப்பை துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைக்கவும்.
அரை கப் சூடான பாலில் பேரீட்சை பழங்களை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில் கோதுமையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வறுக்கவும். கோதுமை வாசனை போகும் வரை 2 நிமிடம் வறுக்கவும்.
வறுத்த கோதுமை மாவில் அரை கப் ஆற வைத்த பாலை ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
மீதியிருக்கும் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். கரைத்து வைத்திருக்கும் கோதுமை கலவையை அதில் ஊற்றி கொண்டே பாலை கிளறி விடவும்.
2 நிமிடம் கழித்து ஊற வைத்த பேரீட்சை பழத்தை போட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலவை சற்று கெட்டியாக ஆனதும் 3 நிமிடம் கழித்து சீனியை போட்டு கிளறி விடவும். அதில் ஏலக்காய் பொடியை தூவி கிளறி இறக்கி விடவும்.
அதன் பிறகு துருவிய பாதாம் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சையை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

No comments:

Post a Comment