Total Pageviews

Total Pageviews

Wednesday, June 9, 2010

கூந்தல் பராமரிப்பிற்கு சில யோசனைகள்|Tamil hair loss prevent tips|tamil womens beauty tips|அழகு குறிப்புகள்

1 . முடி உதிர்வை தடுக்க

சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும்.
தலை வரும்போதே அதிக அளவு உதிரும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

மருதாணி பவுடர் பாக்கெட் கடைகளில் கிடைக்கும்.
அதை ஒரு பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வாய்த்த டீ தூள் டிக்காஷனை (சிறுது அறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெண் கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சரி ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும்.

உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.

குறிப்பு :


* கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.
* நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் என்னை போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.
* சிறுது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.
* நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும்.

இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.

இதை நான் படித்து உங்களிடம் பகிரவில்லை. உபயோகித்து பகிர்ந்து கொள்கிறேன்.

2 . தேங்காய் எண்ணெய் உபயோகம் பற்றி

சில பேர் தலை முழுவதும் தேங்காய் எண்ணெய் வைத்து கொண்டு வெளியில் செல்வார்கள். அவ்வாறு செய்தால் முடி வீணாகாது என்பார்கள். அது உண்மை அல்ல.

இதனால் வெளியில் பறக்கும் தூசு, நம் தலை முடியில் ஈசியாக ஒட்டி கொள்ளும். பிறகு அறிப்பு, பொடுகு தொல்லை ஏற்படும்.

இரவில் உறங்க போகும் முன் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து விட்டு பகலில் ஷாம்பூ (அ) சீயக்காய் போட்டு குளித்து பாருங்கள். கூந்தல் மென்மையாக இருக்கும்.

1 comment: